அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதன் கட்டுமான பணியில் ஈடுபட விண்வெளி வீரர்கள் அங்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு ஏற்கனவே முகாமிட்டு இருந்த ரஷிய வீரர்கள் வினோ கிராடோவ், அலெக்சாண்டர் மிசுகின், அமெரிக்காவின் நாசா வீரர் கிறிஸ் காஸ்சிடி ஆகியோர் கடந்த 11–ம் திகதி பூமிக்கு திரும்பினர்.
இவர்கள் ரஷியாவின் கோயுஷ் டிஎம்ஏ.–08எம் (Russia TMA-08m spacecraft) என்ற விண்கலம் மூலம் களகஸ்தானில் தரை இறங்கினர். ஆனால் அதற்கு முன்னதாக வான்வெளியை நெருங்கும் போது கோயுஷ் விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
எந்திரத்தில் சென்சார் எனப்படும் முக்கிய பகுதி இயங்காமல் நின்று விட்டது. இதனால் தரை இறங்குவதில் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இது பற்றிய தகவல் மாஸ்கோவில் உள்ள விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்துக்கு தெரியவந்தது.
இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையே விண்கலத்தில் இருந்த வீரர்கள் சாமர்த்தியமாக பாராசூட் மூலம் சூயஷ் விண்கலத்தை பத்திரமாக மெதுவாக தரை இறக்கினர்.
அதனால் விண்கலம் தீப்பிடிக்காமல் பத்திரமாக தரை இறங்கியது. அதில் இருந்த வீரர்களும் உயிர் தப்பினர்.
Expedition 36 Commander Pavel Vinogradov and Flight Engineer Alexander Misurkin of the Russian Federal Space Agency and NASA Flight Engineer Chris Cassidy landed safely on the steppe of Kazakhstan on Sept.
11, local time, after bidding farewell to the Expedition 37 crew and undocking their Soyuz TMA-08M spacecraft from the Poisk module on the International Space Station.
The trio completed 166 days in space since launching in late March. They are shown being assisted into reclining chairs by Russian personnel and beginning their adaptation to gravity after they were extracted from their capsule in Kazakhstan.
Home »
Technology
» தொழில்நுட்ப கோளாறு: பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விண்கலம்!
தொழில்நுட்ப கோளாறு: பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விண்கலம்!
Written By TamilDiscovery on Sunday, September 15, 2013 | 10:46 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !