ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று (05) அதிகாலை தீக்குளித்த தமிழர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜெனீவாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
35 வயதான செந்தில்குமரன் ரட்ணசிங்கம் என்பவரே இவ்வாறு மரணமானவரென உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற தமிழர் ஒருவர் உடலில் தீயைப் பற்றவைத்துள்ளார்.
அந்தப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக ஓடிச்சென்று குறித்த நபரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தீக்குளித்தவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மேலதிக சிகிச்சைகள் நடந்துவருவதாகவும் பாதுகாப்பு துறையினர் தெரிவித்திருந்த நிலையில் தீக்குளித்த நபர் மரணமடைந்துள்ளதாக ஜெனிவா பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீக்குளித்தவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது. இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட தடயங்கள் இதனை உறுதி செய்வதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர் யார் என்பதையோ இவரிடமிருந்து மீட்கப்பட்ட தடயங்களையோ பாதுகாப்பு துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
எனினும் உயிரிழந்தவர் 35 வயதான செந்தில்குமரன் ரட்ணசிங்கம் என ´தமிழ்நெட்´ இணையம் தெரிவித்துள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் வல்லிஸ் - சொயின் நகரில் வசித்து வந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !