Headlines News :
Home » » இந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது?

இந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது?

Written By TamilDiscovery on Friday, August 2, 2013 | 1:02 AM

இந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது?

மேஷம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு தாமதமாகலாம். பயணங்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். கணவர் பாசமாக இருப்பார். பேச்சில் நிதானம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: விடுப்பில் சென்றுள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. அடுத்தவர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம்.

ரிஷபம்: எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம்.

பெண்களுக்கு: கணவருடன் ஏட்டிக்குப் போட்டியாக பேச வேண்டாம். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். இல்லையெனில் கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மிதுனம்: ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் காரியங்களை நினைத்தபடி செய்து முடிக்க சிரமப்பட வேண்டி இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்காது.

பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று நல்ல பெயர் எடுக்கவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: பணி நிமித்தமாக வெளியூர் சென்று வரக்கூடும். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

கடகம்: தக்க நபர்களின் உதவியோடு உங்கள் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.

பெண்களுக்கு: கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பப் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பீர்கள். சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். பெரியோரின் ஆசி கிடைக்கும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடப்பீர்கள். சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சில சலுகைகளைப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்தபடி ஊதிய உயர்வு கிடைக்கும்.

சிம்மம்: மனம் மகிழும் செய்தியை கேட்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு: குடும்பத்தார் சந்தோஷமாக இருப்பார்கள். அதை பார்த்து நீங்கள் நிம்மதி அடைவீர்கள். கணவரை அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். சிலருக்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

கன்னி: வழக்குகள் சாதகமாக முடியும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உறவினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். தாய் வழி உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்: சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணம் பல வழிகள் வந்து சேரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடியே முடியும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு: கணவர் மீது பாச மழை பொழிவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். மகன் அல்லது மகளுக்கு அதிக ஆதாயத்துடன் கூடிய புதிய வேலை கிடைக்கலாம்.

வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அவற்றால் பாதிப்பு எதுவும் இருக்காது. வேலையில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்: உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் அடங்கிவிடுவார்கள். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகக்கூடும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோரின் உடல் நலனில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நலம். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி முக்கிய வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள்.

தனுசு: நட்பு வட்டாரம் விரிவடையும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதாரம் மேம்படும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும். சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்.

வேலை பார்ப்போருக்கு: உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். பொறுப்புகள் அதிகமாகலாம். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

மகரம்: எதிலும் கவனமாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உங்கள் பேச்சை பிறர் மதிப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு: குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். கணவர் அன்பாக இருப்பார். உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கவும். சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கலாம். அலுவலகத்தில் குடும்ப பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாம்.

கும்பம்: சமுதாயத்தில் உங்களின் மதிப்புக்கும், மரியாதைக்கும் எந்த குறையும் இருக்காது. உங்கள் காரியங்கள் திருப்திகரமாக முடியும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். செலவுகள் அதிகரிக்கும். அதனால் நீங்கள் கவலைப்படக்கூடும்.

பெண்களுக்கு: எதிலும் நிதானம் தேவை. குடும்த்தில் கடன் தொல்லைகள் தலை தூக்கலாம். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். பெரியவர்களின் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: வேலைகளை சிறப்பாக செய்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களை முழுவதுமாக நம்ப வேண்டாம்.

மீனம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். பண வரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பது ஆறுதலாக இருக்கும். ஆன்மீக பலம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனை ஏற்படலாம். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: சிலர் அதிக ஆதாயமுள்ள வேலைக்கு செல்ல முயற்சி செய்யக்கூடும். எதிர்பார்க்கும் கடன் தொகை கிடைக்கலாம். யாருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். சக ஊழியர்களைப் பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம்.

Share this article :

1 comment:

  1. Astrology is characterized as, "the divination of the alleged impacts of the stars and planets on human undertakings and earthly occasions by their positions and perspectives." There's a well-known axiom that things are "written in the stars," and for adherents of astrology,


    Best Astrologer in Mumbai

    ReplyDelete

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template