முன்னாள் பிரபல ஹெவிவெய்ட் (Heavy weight) குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் (Mike Tyson - age 47) பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி 90-களில் விமர்சனத்துக்குள்ளானவர்.
1992-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய டைசனுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மூன்று வருட சிறைத்தண்டனைக்கு பிறகு அவர் விடுதலையானார்.
அதனையடுத்து மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் மைக் டைசன் கலந்துகொண்டார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றிபெற்று உலக குத்துச்சண்டை கவுன்சில் மற்றும் உலக குத்துச் சண்டை அசோசியேசன் பட்டங்களையும் வென்றார்.
அடுத்து உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டத்திற்காக 1997-ம் ஆண்டு நடந்த போட்டியில் மைக் டைசன் இவாண்டர் ஹோலிபீல்டுடன் மோதினார். இதில் இவாண்டர் ஹோலிபீல்டின் காதை கடித்து மைக் டைசன் துப்பினார். இதனால் போட்டிகளிலிருந்து மைக் டைசன் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மகளின் இறப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய மைக் டைசன் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானார்.
இந்நிலையில் செய்தி நிறுவன ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மைக் டைசன், "நான் ஒரு கெட்டவன்". நான் பல்வேறு கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். நான் மன்னிக்கப்பட வேண்டுகிறேன். எனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். நிதானமான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். நான் சாக விரும்பவில்லை. ஆனால், பல்வேறு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையான நான் சாவின் விளிம்பில் நிற்கிறேன்’’
என்று கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !