இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ரயில்
ஏறுவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ்
ரயில் மோதியதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம், கஹாரியா மாவட்டத்தில் உள்ள கத்யானி ஸ்தன் என்ற ஊரில்
புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது. நேற்று விடுமுறை என்பதால் இங்கு ஏராளமான
பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் இன்று காலை ஊர் திரும்புவதற்காக அங்குள்ள ரயில் நிலையத்திற்கு
வந்தனர். அப்போது 2வது பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில் நின்று
கொண்டிருந்தது.
அதில் ஏறுவதற்காக முதல் பிளாட்பாரத்திலிருந்து குதித்து தண்டவாளத்தை கடக்க
முயன்றனர். அப்போது அந்த தண்டவாளத்தில், சாகர்சா பாட்னா ராஜ்ராணி
எக்ஸ்பிரஸ் ரயில் மிக வேகமாக வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள்
மோதியது. இதில் பலர் உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர்
படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மரண ஓலமிட்டனர்.
ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பானது. இதற்கிடையே, எக்ஸ்பிரஸ் ரயில்
நிறுத்தப்பட்டது. பயணிகள் தண்டவாளத்தை கடப்பதை கவனிக்காமல் வேகமாக வந்த
அந்த ரயிலின் சாரதி மீது கோபமடைந்த பயணிகள், அவரை இன்ஜின் பெட்டியிலிருந்து
வெளியே பிடித்து இழுத்தனர்.
அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரயில் நிலைய அதிகாரிகள் தலையிட்டு அவரை
மீட்டனர். இருப்பினும் ஆத்திரம் தீராத பயணிகள் அவர்களை சிறைபிடித்தனர்.
இந்நிலையில், பயணிகள் பலியான தகவல் அறிந்த உள்ளூர் பொலிசாரும், மீட்பு
படையினரும் விரைந்து வந்தனர். வன்முறை கூட்டத்தை சமாதானப்படுத்த முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !