படம் வெளியான பின்னர்தான் சரியான நேரம் பற்றிய செய்தி தெரியவரும். அதுவரை வெளிவருவது எல்லாம் யூகமே. துப்பாக்கிக்கு பின்னர் இளையதளபதியின் ரசிகர்கள் இளையதளபதியை வேறு ஒரு லெவெலுக்கு கொண்டுசென்றுள்ளர்கள் என்பதுதான் உண்மை. ரசிகன் உடையான் எதற்கும் அஞ்சான்.
இளையதளபதியின் தலைவா படத்திற்கு தணிக்கை குழு அதிகாரிகள் “யு” சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் மாபெரும் தொகையை கேளிக்கை வரியாய் காட்டாமல் தவிர்த்துள்ளது தலைவா படக்குழு. படத்தின் தணிக்கை சான்றிதழ்:
தலைவா படம் 2000 திரையரங்குகளில் மட்டுமே.
தலைவா படம் 2000 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் நாளை மறுதினம் வெளியாகிறது. இந்தப் படம் 4000 அரங்குகளில் வெளியாவதாக செய்தி பரவி வந்தது.
உலகம் முழுவதும் வெளியாகும் ஹாலிவுட் படங்களே அதிகபட்சம் 3500 திரையரங்குகளில் வெளியாவதே கடினம் என்றுள்ள சூழலில், விஜய் நடித்த தமிழ்ப் படம் 4000 அரங்குகளில் வெளியாவதாக வந்த செய்திகள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் படம் எத்தனை அரங்குகளில் வெளியாகிறது என்ற தகவலை தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினே அறிவித்துள்ளார்.
தலைவா படம் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் 500 அரங்குகளிலும், ஆந்திராவில் 300 அரங்குகளிலும், கேரளாவில் 100 அரங்குகளிலும், மும்பையில் 100 திரையரங்குகளிலும், மலேசியா - சிங்கப்பூரில் 50 அரங்குகளிலும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார்.
இதுபோக, பிரிட்டன், அமெரிக்காவில் 100 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகிறதாம் தலைவா.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !