நல்ல வேலைவாய்ப்புகள் பெறுவதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் பழக்கம், சீன இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்கு படித்திருந்தாலும், அதிக சம்பளத்தில், நல்ல வேலை கிடைப்பதற்கு, முக அமைப்பும் முக்கியம் என்ற எண்ணம், சீனாவில், பெரும்பாலான இளைஞர்களிடையே பரவியுள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஜோங்டா மருத்துவமனையில், பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு உள்ளது.
இங்கு தினமும், 200 பேர் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களின், 70 சதவீதம் பேர் மாணவர்கள். கோடை விடுமுறையான, கடந்த மாதம், ஏராளமானோர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர்.
நல்ல தோற்றமுள்ளவர்கள், சக ஊழியர்களிடம் நற்பெயர் பெற முடியும் என்ற எண்ணம் அனைவரிடமும் நிலவுகிறது. இந்தக் காரணங்களுக்காக, தன் முகத்தை, 350 டொலர் செலவில், சீரமைத்து கொண்டதாக, பீஜிங்கில், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும், சேன் ரோங், என்பவர் கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !