Headlines News :
Home » » தலைவா எதிர் நோக்கியிருக்கும் பிரச்சினைகளும்: நிய பின்னணிகளும்!

தலைவா எதிர் நோக்கியிருக்கும் பிரச்சினைகளும்: நிய பின்னணிகளும்!

Written By TamilDiscovery on Wednesday, August 7, 2013 | 11:44 PM

விஜய்யின் தலைவா படம் தலைப்பு, தணிக்கை பிரச்சனைகளை தகர்தெறிந்து நாளை வெளிவரவிருக்கும் நிலையில் நேரடி அரசியல் தலயீடு, வெடிகுண்டு மிரட்டல் போன்ற பிரச்சனைகளால் சிக்கித்தவிக்கிறது.

இந்நிலையில் மேலும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளது. அதாவது "தலைவா' படத்துக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, தயாரிப்பாளர், இயக்குநருக்கு சென்னை இரண்டாவது அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப புதன்கிழமை உத்தரவிட்டது.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களின் மத்தியில் பிரபலமானவர் எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட். அவர் சீதபதற்பநல்லூர் கிராமத்தில் இருந்து சுதந்திரத்துக்கு முன்பு சிறு வயதில் தாராவிக்கு சென்றார். அங்கு, அவர் தோல் பதனிடும் தொழில் செய்தார். அது தவிர, அங்கிருந்த ஏழை எளிய தமிழர்களுக்கு சமுதாய மற்றும் மத ரீதியான சேவைகளை செய்து வந்தார். அதனால், தென் இந்திய ஆதிதிராவிட மாகஜன் சங் என்ற அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பதவிகளை வகித்தார்.

எஸ்.எஸ்.கே.க்கு எஸ்.கே.ராமசாமி, எஸ்.கே.பன்னீர்செல்வம், எஸ்.கே.அழகர்சாமி ஆகிய 3 மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் உண்டு. அவர்களில் பன்னீர்செல்வம் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டார். அழகர்சாமி மர்மமான முறையில் இறந்தார். அவர்களில், எஸ்.கே.ராமசாமி பல்வேறு சமுதாய சேவைகளைச் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அங்குள்ள மக்களுக்காக கோயில்கள் மற்றும் பள்ளிக்கூடம் கட்டி உள்ளார். மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் அவர் பணியாற்றினார்.

தாராவியில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல சொந்த ஊரான சீதபற்பநல்லூர் மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை எஸ்.கே.ராமசாமி செய்துள்ளார். 15.2.87 அன்று அவர் மரணமடைந்தார். அவர் செய்த சமுதாயத் தொண்டுகளுக்காக அவரை தாராவித் தலைவன் என்று மக்கள் அழைத்தனர்.

எஸ்.கே.ராமசாமியின் மகன் நான். இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாற்றைத்தான் "தலைவா' என்ற படத்தில் கதையாக வைத்திருப்பதாக தெரிய வந்தது. அதில், எனது தாத்தாவின் கதாபாத்திரத்தில் நடிகர் சத்தியராஜ், எனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளதாகத் தெரிகிறது. எனது தாத்தா மற்றும் தந்தை அணியும் வெள்ளை உடைபோல, தலைவா படத்தில் இவர்களும் உடை அணிந்து நடித்துள்ளனர். ஆனால் தந்தை சத்தியராஜை கொலை செய்தவர்களை மகன் விஜய் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுபோல் "தலைவா' படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. எனது தந்தை அவ்வாறு யாரையும் கொலை செய்யவில்லை.

எனது தாத்தாவும், தந்தையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது போலவும், தாதா போலவும் "தலைவா' படத்தில் காட்டப்படுகிறது. இந்த படம் 9-ஆம் தேதி வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. "தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதனால், இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், வெளியீட்டாளர் மதன், இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர், இயக்குநர், வெளியீட்டாளர் ஆகியோர் 14- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டார்.

“உங்க ‘அம்மா’வை பாருடா, அப்புறமா மத்த ‘அம்மா’வ பாக்கலாம்”.

‘விஸ்வரூபம்’ பட ரிலீஸின் போது கமலுக்கு இருந்த அரசியல் நெருக்கடிகளைப் போலவே விஜய்யின் ‘தலைவா’ படத்துக்கும் கடும் நெருக்கடிகளை ஆளும் அரசு கொடுக்க ஆரம்பித்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

விஜய் நடித்த ‘காவலன்’ படத்தின் ரிலீஸின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க ஓவராக டார்ச்சர் கொடுத்தது. தற்போது அதேபோல ஒரு பிரச்சனையை தான் விஜய் வலியப் போய் சேர்ந்த கட்சியான அ.தி.மு.கவும் தலைவா படத்திற்கு கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த சிக்கலுக்கு மிக முக்கிய காரணம் தலைவா படம் ஒரு அரசியல் படம் என்றும்,  படத்தில் இடம் பெற்றுள்ள “உங்க ‘அம்மா’வை பாருடா, அப்புறமா மத்த ‘அம்மா’வ பாக்கலாம்”, “எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க, எனக்கு ஒட்டு போடுங்க, நான் நல்லது செய்யறேன்” என்று  விஜய் பேசும் இரண்டு அரசியல் டயாலாக்குகள் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ்த்திரையுலக பிரபலங்களும் கடுப்பாகியுள்ளனர். இதுகுறித்து பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது :

‘தலைவா’ படத்தை கடைசி நிமிடத்தில் ‘ப்ளாக்மெயில்’ வருத்தப்பட வைக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் தக்க நீதி வழங்க வேண்டும், அவர்கள் வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். அதுவரை விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜைப் போல மற்ற பிரபலங்களும் தங்களது சமூகவலைத்தளங்களில் ‘தலைவா’ படத்துக்கு ஆதரவாக கருத்துகளை கொட்ட ஆரம்பித்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template