Written By TamilDiscovery on Wednesday, August 14, 2013 | 11:12 AM
தமிழகத்தில் தலைவா என்று படப் பெயர் வைத்தால்தானே நிச்சயமாக பெரும் சிக்கலை ஒன்றை எதிர்கொண்டே ஆக வேண்டியதிருக்கிறது என்பதே சினிமா உலகின் ‘சென்டிமென்ட்டாக’ இருக்கிறது. தமிழ் சினிமா உலகத்தின் சென்டிமென்ட்டுகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அப்பப்பா நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு எல்லாம் நீளும்.
அதில் ஒன்றுதான் ‘தலைவா’ பட டைட்டிலும்கூட. ‘தலைவா’ படத்தின் பெயரை வைத்துக் கொண்டு படத்தை வெளியிடாமல் நடிகர் விஜய் தவியாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த தலைவா சென்டிமென்ட்ட் இப்போ ‘தலை’ தூக்கியிருக்கிறது.
அன்று எம்.ஜி.ஆர்:
எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் பெயர் தலைவன். ஆனால் எம்.ஜி.ஆரின் சினிமா வரலாற்றில் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு வெற்றி பெறாத படமாகப் போய்விட்டது. பொதுவாக அரசியலில் சினிமா ஆளுமைகள் கோலோச்சிவிட்ட நிலையில் தலைவா, தலைவர், தலைவன் பெயரை சூட்டவே தயங்கி வருகிறது சினிமா.
தலைவன்:
இந்த நிலையில் தலைவன் என்று பெயரிட்டுக் கொண்டு சசிகலா குடும்பத்து பாஸ்கரன் உலா வந்தார். அண்மையில் அவரும் ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்.
தலைவா:
இந்த சென்டிமென்ட் சிக்கலில் இப்போது சிக்கியிருப்பவர் நடிகர் விஜய். தலைவா படத்துக்கு பெயர் வைத்த கையோடு ஒழுங்காக படம் எடுத்துவிட்டுப் போயிருந்தால் பரவாயில்லை என்கின்றனர் சினிமா புள்ளிகள். தேவையில்லாமல் படத்திலும் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் விஜய்யும் அவரது அப்பாவும் அரசியல் பேசப் போய் இப்பொழுது திரையரங்குகளே அறிவிக்கப்படாத தடை விதித்து விட்டன.
முதல்வர் கையில்:
விஜய்யின் தலைவா படத்தை வெளியிட வேண்டுமானால் முதல்வரை சமாதானப்படுத்த வேண்டும் என்று திரை அரங்க உரிமையாளர்கள் கொடிபிடித்து நிற்கின்றனர். பெருந்தலைகளுக்கே தலைவா தண்ணிகாட்டிவிட்டதால் இனி அனேகமாக கோடம்பாக்க ‘கனவு’ ஸ்டார்கள் இந்த வார்த்தையை உச்சரிக்கவே தயங்கலாம்.
AMMAVIN MATHIPU VIRAIVIL PATHALATHUKU POKA POKIRATHU
ReplyDelete