பூநகரி விநாசியோடைப் பகுதியில் பச்சையுடை தரித்தோரால் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடகமொன்றிற்கு வழங்கிய செய்தி குறித்து பொலிஸ் விசாரணை செய்துள்ளனர்.
கடந்த 13.08.2013 செவ்வாய்கிழமை அன்று பூநகரி விநாசியோடைப் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தன் வீட்டுக்குப் பின்புறமாகவுள்ள பனங்காட்டில் பனங்குருத்து வெட்டச் சென்ற வேளையில் பச்சை உடை தரித்த இருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்.
இவர் மாலை 5.00 மணிக்குப் பின் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடும் இரத்தப் போக்குக் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இன்றுவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் வீடு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இச் சம்பவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பி.பீ.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செய்தி குறித்து சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து இன்று பிற்பகல் 12.15 தொடக்கம்1.30 வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைமைச் செயலகமாகிய அறிவகத்தில் உதவிப் பொலிஸ்மா அதிபர் AJYB கிருஷாந்த, கிளிநொச்சி பொலிஸ் தலைமை அதிகாரி CK வீரசிங்க,பொலிஸ் பரிசோதகர் ஆர்றித்தீன் ஆகியோர் விசாரணை நடத்தி பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.
ஏலவே இப்பெண் மீதான பலாத்காரம் தொடர்பாக நீதியான விசாரணை தேவை என வலியுறுத்தி கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகருக்கு சி.சிறீதரன் எழுத்து மூலமும் அறிவித்தார்.
ஆனால் இதுவரை சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படவோ விசாரணை செய்யப்படவோ இல்லை. அண்மைய நாட்களாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை இராணுவம் அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !