பைக் ஓட்டுகையில் அதற்கான சூட் மற்றும் ஹெல்மெட் போடுவதன் அவசியம் குறித்து அஜித் குமார் தெரிவித்துள்ளார். அஜித் குமாருக்கு பைக் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிஎம்டபுள்யூ பைக்கில் சென்னை சாலைகளில் வலம் வந்தார். பின்னர் வீதியோர கடையிலும் சாப்பிட்டார். இதையடுத்து அவர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பைக்கில் சென்றார். இந்த தகவல் அனைவருக்கும் தெரிந்ததே. அவர் ஏன் ரேஸ் சூட்டில் பைக் ஓட்டினார் என்று தெரியுமா?
நான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சொகுசு பைக்கில் சென்றது ஜாலிக்காக இல்லை என்று அஜித் தெரிவித்துள்ளார். பைக் ஓட்டுபவர்கள் பாதுகாப்புக்கு சூட், ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பைக் பயணம் என்றார் அஜித்.
ரேஸ் சூட் போட்டு பைக் ஓட்டியதால் நான் பந்தயத்திற்கு சென்றேன் என்று அர்த்தம் இல்லை. பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டியதை வலியுறுத்தத் தான் இவ்வாறு செய்தேன் என்று அஜித் கூறினார். நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ஒரு நல்ல காரணத்திற்காக பைக் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அஜித்.
அலுவலகங்களுக்கு பைக்கில் செல்பவர்களும் பாதுகாப்பு உடை, ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நான் மக்களை ஊக்குவிக்கிறேன். இதெல்லாம் வாங்க பணம் அதிகம் செலவாகும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஏதாவது நடந்தால் சாதாரண எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவே ரூ.7,000 ஆகிறது. அதனால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சாலை விபத்தில் சிக்கி செலவழிப்பதற்கு பதில் பாதுகாப்பு உபகரணங்களுக்கு செலவழிக்காலம் என்றார் ´தல´.
வெயில் வாட்டி எடுக்கும் சென்னையில் சூட் போட்டு பைக் ஓட்டினால் மக்கள் வெந்துவிட மாட்டார்களா என்று கேட்டதற்கு அஜித், இரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேல் என்றார். எனது படங்களில் கூட நான் பைக்கில் வரும் காட்சிகளில் ஹெல்மெட் அணிந்து வருவதை வலியுறுத்துகிறேன் என்றார் அஜித்.
BMW 1000 RR இல், ரேஸ் உடையில் சென்னையை வலம்வந்த அஜித்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !