இந்தியாவின் மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு கடலால் பேராபத்து காத்திருக்கிறதாம். 2050ம் ஆண்டுக்குள் இந்த நகரங்களை கடல் கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
மாறி வரும் இயற்கையும், தட்பவெப்ப மாற்றம் மற்றும் புவி வெப்ப அதிகரிப்புமே இதற்குக் காரணம் என்கிறார்கள். என்னதான் பாதுகாப்பைப் பலப்படுத்தினாலும் கூட இந்த இரு நகரங்களையும் கடல் காவு கொள்வதிலிருந்து காப்பாற்றிக் கொள்வது சிரமம் என்கிறார்கள்.
இந்த இரு நகரங்களிலும் மும்பைதான் பெரும் அழிவைச் சந்திக்குமாம். அதாவது 600 கோடி டொலர் அளவுக்கு இந்த நகரம் பேரழிவை சந்திக்குமாம். அதேசமயம் கொல்கத்தா நகருக்கு 300 கோடி டொலர் அளவுக்கு நஷ்டம் ஏற்படுமாம். இந்த இரு நகரங்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் 136 பெரிய கடலோர நகரங்களுக்கும் ஆபத்து இருக்கிறதாம்.
இதனால் ஒட்டுமொத்தமாக 750 பில்லியன் ஈரோ அளவுக்கு இழப்பு ஏற்படுமாம். ஒருவேளை பாதுகாப்பை மிகத் தீவிரமாக பலப்படுத்தினால் இந்த பேரழிவின் நஷ்டத்தை ஓரளவு குறைக்க முடியுமாம். இல்லாவிட்டால் அவ்வளவுதான்.
மக்கள் தொகை அதிகரிப்பும், புவிவெப்ப மயமாதலும் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !