குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ள பா.ஜ.க தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தை தொடர்ந்து கடந்த 2005ஆம் ஆண்டு நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. இதனிடையே, விசா கேட்டு நரேந்திர மோடி விண்ணப்பித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.
இந்த நிலையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் இருப்பதாக அமெரிக்க அரசின் சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான ஆணையத்தின் துணைத் தலைவரான கேட்ரினா லன்டாஸ் ஸ்வெட் தெரிவித்துள்ளார்.
இதனால் மோடிக்கு அமெரிக்க விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆணையம் மத சுதந்திரத்திற்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை ஆய்வு செய்து, அமெரிக்க அரசுக்கு கொள்கை ரீதியான பரிந்துரைகளை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !