லக்கல பொலிஸ் நிலையத்தில் மிக சேமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் லக்லை ஹத்தோட்ட அமுன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லக்கல, களுகங்க ஹத்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ர். அண்மையில் மணல் ஏற்றிச் சென்ற லொறியில் சிக்குண்டு தாய் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக தெரிவித்து இவ் இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு பின் பகுதியில் உள்ள களுகங்கையில் தனது தலையை அமுழ்த்தி தாக்கியதாகவும் இளைஞன் தெரிவித்துள்ளதாகர்.
அத்துடன் கங்கை கரையில் வைத்து மரம் ஒன்றின் கிளையை வளைத்து தனது இரு கைகளை அந்த கிளையில் கட்டி பின்னர் விடுவித்தவுடன் தான் மேலே வீசப்பட்டு கங்கையில் விழுந்ததாக அவ் இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு பின் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மாத்தளை இரண்டாம் வளையத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அதிகாரி திலின ஹேமாபத்திரனவிடம் அத தெரண வினவியபோது அவ்வாறு சித்திரவதை செய்யப்படவில்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.
மணல் ஏற்றிச் சென்ற லொறியில் இருந்த பொருட்கள் காணாமற் போயுள்ளதாகவும் அது குறித்தே இளைஞனிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Home »
» பொலிஸ் நிலையத்தில் சேமான முறையில் சித்திரவதை: இளைஞர் வைத்தியசாலையில்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !