இங்கிலாந்தில் கண் பார்வையை இழந்த ஒரு நபர் அதிவேகமாக பைக்கை ஓட்டி புதிய சாதனை படைத்து பார்ப்போரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
எடின்பர்க்கை சேர்ந்தவர் ஸ்டுவர்ட் கன். இவருக்கு வயது 39. உலகில் மிக அதிவேகமாக பைக் ஓட்டிய கண் பார்வையற்றவர் என்னும் பெருமையை ஸ்டுவர்ட் பெற்றுள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஸ்டுவர்ட் சிக்கினர். விபத்தில் சிக்கி தோள் பட்டை எலும்பு உள்பட முதுகில் 2 இடங்களில் எலும்பு நொறுங்கி, அவரது உடலின் வலது புறத்தில் பக்கவாதம் ஏற்பட்ட போதும் மனவலிமை இழக்காமல் அவர் தொடர்ந்து போராடினார்.
அதிவேகமாக பைக் ஓட்டவேண்டுமென தன்னம்பிக்கையுடன் முயற்சித்த ஸ்டுவர்டிற்கு அவரது தந்தையான ஜியோப் உறுதுணையாக இருந்தார்.
ஸ்டுவர்ட் பைக் ஓட்டும்போது இண்டர்காம் மூலம் அவரது தந்தை ஜியோப் தொடர்ந்து அவருக்கு தேவையான தகவல்களை அளித்துவருவார். அதுபோன்று பயிற்சி பெற்ற ஸ்டுவர்ட் சமீபத்தில் ஷன்பர்க் நகரில் மணிக்கு 167.1 மைல் வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார்.
அதன் மூலம் பூமியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த கண்பார்வையற்ற வாலிபர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !