பிரான்ஸ் நாட்டில் முதன் முதலாக மீன் கண்காட்சியகத்தில் அரிய வகை சுறா ஒன்று பிறந்துள்ளது.
பிரான்சில் உள்ள ஒசனோபோலிஸ் (Oceanopolis aquarium) மீன் கண்காட்சியத்தில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் வளரக்கூடிய வரிக்குதிரை சுறா பிறந்துள்ளது.
3 மீற்றர் நீளம் வரை வளரும் இந்த சுறா அழிந்து வரும் அரிய வகை உயிரினமாகும். யூன் 10ம் திகதி ஒரு சுறா, யூலை 30ம் திகதி ஒரு சுறா மற்றும் ஒகஸ்ட் 3ம் திகதி ஒரு சுறாவும் பிறந்துள்ளன. இன்னும் இரண்டு முட்டைகளிலிருந்து சுறாக்கள் வெளிவராத நிலையில் உள்ளன.
மேலும், சுறா என்ற தலைப்பில் ஆவணப்படமானது தயாரிக்கப்பட்டு கடலியல் திரைப்பட விழாவில் ஒக்டோபர் 20 முதல் நவம்பர் 1 வரை திரையிடப்படும் என்று ஒசனோபோலிஸ் மீன் கண்காட்சியகம் (oceanopolis aquarium) தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !