மெட்ராஸ் கபே படத்தைத் திரையிடும் அரங்குகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.
ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசானது, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் மெட்ராஸ் கபே எனும் திரைப்படம்.
இது குறித்து வைகோ கூறுகையில், இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்திருப்பவருமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், ரகசியமாக கொடியவர் மகிந்த ராஜபக்சேயை, இருமுறை சந்தித்து உள்ளார்.
இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறார்.
இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவர் இயக்கி உள்ளார். 1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்பு, இந்தியாவின் உளவு நிறுவனமான ரா அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவனாக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்குள்ள நிலைமையை அறிகிறார்.
பின்பு பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.
மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை, பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சியாக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இலங்கை தமிழர்களுக்கு எதிராக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தினை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !