அமெரிக்காவில் நடைபெறும் இராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த இலங்கையின் இரண்டு சிஷே்ட இராணுவ அதிகாரிகளின் விண்ணப்பங்கள் மனித உரிமை குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே ஒரு அதிகாரிக்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும் பின்னர் அது நிராகரிக்கப்பட்டதாகவும் தற்போது இந்த வருடமும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோர் அமெரிக்காவின் இராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தனர். எனினும் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நேரத்தில் மனித உரிமைகளை மீறியதாக கூறப்படும் இரண்டு இராணுவ படைப்பிரிவுகளில் பணியாற்றினார்கள் என்ற அடிப்படையிலேயே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜகத் ஜயசூரிய கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !