
பீகாரை சேர்ந்த அலி ஹுசைன் என்னும் 14 வயது சிறுவன் ப்ரோகேரியா என்னும் அரிய வகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சொந்தத்தில் திருமணம் செய்துகொண்ட இவரது தந்தை நபி ஹுசைன் கான் (50) மற்றும் தாய் ரசியா(46) ஆகியோருக்கு பிறந்த 8 குழந்தைகளில் 6 பேருக்கு இந்த மரபணு கோளாறு இருந்துள்ளது. தனது 5 சகோதரர்கள் இதே பாதிப்பால் இறந்ததை கண்ட அலி ஹுசைன் தன்னுடைய நாட்களை கஷ்டப்பட்டு நகர்த்திக்கொண்டிருக்கிறார்.
சராசரியான நபர்களை விட சுமார் 8 மடங்கு அதிக வேகத்தில் வயது முதிர்ந்த தோற்றத்தை அளிக்கும் இந்த நோய், பிறக்கும் 8 மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நோய் தாக்கிய நபர்கள் அதிகபட்சமாக 20 வயது வரைமட்டுமே உயிர்வாழ இயலும் என்பதும், இந்த நோயை குணப்படுத்த இன்னும் சரியான மருந்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !