
அந்தளவு தூரம் தொழில்நுட்ப உலகிலும், இளைஞர்களின் மீதும் அவர் தாக்கம் செலுத்தியுள்ளார்.
Steven Paul Jobs
Born:February 24, 1955
San Francisco, California, US.
Died:October 5, 2011 (aged 56)
Palo Alto, California, US.
அவர் காலமாகி வருடம் கடந்துள்ள போதிலும் அவருடைய தொழில்நுட்பப சாதனைகள் இன்றும் பேசப்பட்டு வருகின்றது.
அப்பிள் ஸ்டீவ் போல மைக்ரோசொப்டிலும் ஸ்டீவ் ஒருவர் உள்ளார். அவரின் பெயர் ஸ்டீவ் பால்மர். ஜொப்ஸ் அளவுக்கு இல்லாத போதிலும் சிலிக்கன் வெலியில் இவரும் பிரபலமானவரே. மென்பொருள் உலகின் ஜாம்பவானான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான அவர் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
அவரது பதவிக்கு வேறு ஒருவரை இயக்குனர் சபை தெரிவுசெய்யும் வரை பால்மர் தனது பதவியில் நீடிப்பார்.
இவரது அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த பிரதான நிறைவேற்று அதிகாரியை தெரிவுசெய்யும் பொருட்டு குழுவொன்றை மைக்ரோசொப்ட் இயக்குனர் சபை நியமித்துள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அப்பதவிக்கு ஸ்டீவ் பால்மர் நியமிக்கப்பட்டார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து மைக்ரோசொப்டில் நிறைய மாற்றங்கள் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனினும் ஸ்டீவ் பால்மர் தானாக முன்வந்து ஓய்வு பெறவில்லையெனவும் அவர் கட்டாயமாக விலக்கப்பட்டுள்ளார் எனவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசமான நிதிச் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டே அவர் விலக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !