ரஷ்யாவின் உக்ரைன் பகுதியில் இயங்கிவரும் பெண்ணிய அமைப்பான ஃபெமன் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பெண் ஆர்வலர்கள் ஸ்வீடன் நாட்டில் இருக்கும் ரஷ்யத் தூதரகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்தார்கள்.
மேலாடையின்றி வந்த இருவரும், ஸ்டாக்ஹோமில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் வேலி மீது ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர்.
வானவில் நிறத்தில் இருந்த கொடிகளை ஆட்டிகாட்டிய அவர்கள், ரஷ்ய மண்ணில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதாகக் கூறினார்கள். இவர்களுடன் தூதரகத்தின் வெளியே நின்றுகொண்டிருந்த இரண்டு ஆர்வலர்களும் சேர்ந்துகொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமையும் மனித உரிமையாகும் என்று கோஷம் எழுப்பினர்.
பின்னர் பொலிஸார் வரவழைக்கப்பட்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி உள்ளே நுழைந்ததை ஒப்புக்கொண்ட பின்னர், இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஓரினச் சேர்க்கையாளர்கள் ஊர்வலம் நடத்தினாலோ அல்லது இளம்பருவத்தினருக்கு அவர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தாலோ அபராதங்கள் விதிக்கப்படும் என்ற சட்டம் சமீபத்தில் ரஷ்யாவில் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்தே தங்கள் குழு ஆர்ப்பாட்டம் செய்தது என்று தூதரகத்திற்குள் நுழைந்த பெண்ணிய ஆர்வலர்களில் ஒருவரான ஜென்னி வென்ஹாம்மர் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !