
வெலிவேரிய பகுதியிலுள்ள தொழிற்சாலைகளினால் இப் பிரதேசங்களில் உள்ள குடிநீர் கிணறுகளில் இரசாயனம் கலக்கப்படுவதாகவும் உடனடியாக இப்பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளை மூடக்கோரியும் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல்வீச்சு நடத்தியதாகவும் பதிலுக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர்புகை வீசியுள்ளதோடு தண்ணீர் பீச்சியடித்துள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகரிக்க பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பலர் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதில், 11 பேர் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பலர் கம்பஹா மற்றும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்இ அப்பிரதேசத்திலுள்ள கிணறுகளில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை ஆய்வறிக்கை கிடைக்கும் வரையிலும் வெலிவேரிய பகுதியிலுள்ள தொழிற்சாலைகளை இரண்டுவாரகாலத்திற்கு தற்காலிகமாக மூடிவிடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுவரையும் அப்பிரதேசத்திற்கு பவுசர் மூலம் தண்ணீர் விநியோகிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !