நியூசிலாந்துக்கு சொந்தமான இரு தீவுகளுக்கு பல ஆண்டுகளுக்குப் பின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளுக்குப் பின் இந்த தீவுகளுக்கு ஆங்கிலத்திலும் நியூசிலாந்து மக்களால் பேசப்படும், மாவோரி மொழியிலும் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உலகின் கடைக்கோடியில் உள்ள, நியூசிலாந்துக்கு சொந்தமாக, பல தீவுகள் உள்ளன. அவற்றில், இரு தீவுகள், வடக்கு தீவு, தெற்கு தீவு என்றே அழைக்கப்படுகின்றன. கடந்த, 200 ஆண்டுகளாக இந்த தீவுகளுக்கு பெயர் சூட்டப்படவில்லை. மக்களின் விருப்பத்திற்கேற்ப, நியூசிலாந்து அரசு, வடக்கு மற்றும் தெற்கு தீவுகளுக்கு, புதிய பெயர் சூட்ட முடிவு செய்துள்ளது.
அவற்றிற்கான பெயர்களும், தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் விருப்பப்படி, வடக்கு தீவுக்கு, ஆங்கிலத்தில், "த பிஷ் ஆப் மவுஇ´ அதாவது, மாவோரியின் கடவுள் என்றும், மாவோரி மொழியில், "டே இகா - எ - மவுஇ´ என்றும் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் தெற்கு தீவுக்கு, ஆங்கிலத்தில், "ரிவர்ஸ் ஆப் கிரீன் ஸ்டோன்´ அதாவது, பச்சை கற்களின் நதி என்றும் மாவோரி மொழியில், "டே வாய்போனாமு´ என்றும் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !