
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் கே.எம்., இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை துவங்கியுள்ளார். ரமலான் திருநாளன்று நடைபெற்ற இந்த துவக்க விழாவில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிடா அம்பானியும் கலந்து கொண்டுனர்.
இது தொடர்பாக சமூக இணையத்தளம் ஒன்றில் தெரிவித்த ரகுமான், இன்று நாங்கள் கே.எம்., இசை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை துவங்குகிறோம், இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளும் முகேஷ் அம்பானி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு காலமும் நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் தான் இந்த கல்லூரியை துவங்கும் அளவிற்கு என்னை ஊக்குவித்துள்ளது.
இக்கல்லூரி வருங்காலத்தில் இந்தியாவிலிருந்து சிறந்த இசை கலைஞர்களை உருவாக்க உதவி புரியுமென நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !