இந்தியாவின் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவன் காணாமல் போனது பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வல்சாத் மாவட்டம் பிலாத் காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜனக்சின் பார்மர், 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம், தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் திடீரென வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.
இதுவரை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்து அவரை தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை.
இந்நிலையில், காணாமல் போன ஜனக்சின் பார்மரின் மனைவி மஞ்சு கடந்த வாரம் பிலாத் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் காணாமல் போனதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறியிருந்தார். இவ்வளவு காலம் கழித்து புகார் கொடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கூறிய ஆலோசனையைக் கேட்டு பொலிஸாரை அணுகவில்லை என்று தெரிவித்தார்.
விசாரணையில், காணாமல் போன ஜனக்சின் பார்மரின் பெயரில் உள்ள சொத்துக்களை எளிதாக விற்பனை செய்வதற்காக, முறைப்படி இப்போது புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !