கார்கில் போரின் போது இந்திய ராணுவ கப்டன் சவுரவ் காலியா உட்பட 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சித்ரவதை செய்து கொன்றது உண்மை என பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் காணொளி ஆதாரத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
கப்டன் சவுரவ் காலியா மற்றும் அவரது படை பிரிவு வீரர்கள் 1999ம் ஆண்டு மே 15ம் திகதி பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் பிடித்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
ஆனால் இந்திய கப்டன் சவுரவ் காலியா மற்றும் அவரது படைப் பிரிவு வீரர்கள் மோசமான கால நிலையால் உயிரிழந்ததாக அப்போதைய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கார்கில் போர் தொடர்பாக பாகிஸ்தானில் வெளியான காணொளி ஒன்றில் கப்டன் சவுரவ் காலியாவை சித்ரவதை செய்து கொன்றதாக அந்நாட்டு ராணுவ வீரர் புலே என்பவர் ஒப்புக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் கட்டுப்பாட்டு எல்லையை தாண்டி வந்த இந்திய கப்டன் சவுரவ் காலியாவை சுட்டுப் பிடித்ததாக பாகிஸ்தான் ராணுவ வீரர் புலே அந்த காணொளியில் கூறியுள்ளார்.
இந்த தகவலானது இந்திய இராணுவ வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த சித்ரவதை செயல் ஜெனீவா ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் இந்த விவகாரத்தை சர்வதேச கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் இந்திய இராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !