ஜேர்மனில் ஆண் ஒருவர் அழகான பெண் போன்று வேடமிட்டு ஒரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்பி (Barbie) என்பவர் பெர்லினில் உள்ள இரவு விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அவற்றில் பெண் போன்று வேடமிட்டுள்ள அவர் ஊசிகளால் துளையிட்டு வாயை தைக்கிறார். இதில் இரத்தமானது அவரது வாயிலிருந்து வடிந்த வண்ணம் இருந்தது.
இந்த வீடியோவின் அடுத்த இணைப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்(Vladimir Putin) அந்நாட்டில் ஒரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக சட்டம் விதித்து கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளார். ரஷ்ய நாட்டில் நடக்கும் ஒரினச்சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதல்களினால் பார்பி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை உணர்த்துவதற்காக அவர் ஒரினச்சேர்க்கையாளர் வேடமிட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் என்று ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் நடக்கும் இந்த பிரச்சனையை வீடியோவில் வெளியிட்டுள்ளதால் ரஷ்ய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !