
இறுதிப் போட்டியில் நம்பர் 1 அணியான தென் கொரியாவுடன் நேற்று மோதிய இந்தியா 219,215 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தது.
நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி, லைஷ்ராம் பாம்பேலா தேவி, ருமில் புருயிலி ஆகியோர் அடங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக பெறும் 2வது தங்கப் பதக்கம் இது.
முன்னதாக, மெடல்லின் நகரில் நடந்த 3வது சுற்றிலும் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றிருந்தது. நான்காவது சுற்றில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இந்தோனேசியா (217,216), மெக்சிகோ (211,202), டென்மார்க் (214,206) அணிகளை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !