Headlines News :
Home » » நடுவீதியில் எரியும் சடலம்: போர்க் களமாக காட்சியளிக்கும் எகிப் தலைநகர்!

நடுவீதியில் எரியும் சடலம்: போர்க் களமாக காட்சியளிக்கும் எகிப் தலைநகர்!

Written By TamilDiscovery on Thursday, August 15, 2013 | 12:22 PM

பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சியின், ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி அந்நாட்டு இராணுவம் அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் கொதிப்படைந்த அவரது ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்த கோரி தலைநகர் கெய்ரோவில் ரபா-அல்-அடாவியா என்ற முகாம் அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அதனால் மோர்சியின் ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிஸார் நேற்று காலை களத்தில் இறங்கினர்.

அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் அது கலவரமாக மாறியது. பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். பேராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் இன்று அதிகாலை நிலவரப்படி, 400 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் முஹம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் கூறினர். பொலிஸார் தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கெய்ரோ நகரின் பல பகுதிகள் போர்க் களம் போல் காணப்படுகின்றன. துப்பாக்கிச் சூட்டில் இறந்த உறவினர்களின் பிரேதங்களை உறவினர்கள் தேடும் காட்சிகளும், இறந்தவர்களின் மனைவி, பிள்ளைகள் பிணங்களின் மீது விழுந்து கதறியழும் காட்சிகளும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template