அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக் கழகம் நேற்று இந்தியப் பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்து மதக் கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டது.
25 ஆண்டு கால உழைப்பான இந்தக் கலைக்களஞ்சியம் 11 தொகுதிகளைக் கொண்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடிவரும் அன்னா ஹசாரேவும், இந்தியப் பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் தலைவரான சுவாமி சிதானந்த சரஸ்வதியும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட நூற்றுக்கணக்கான இந்துக் குடும்பங்களும் அங்கு கலந்து கொண்டனர்.
அன்றாட வாழ்வில் இந்து மதத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு சிறந்த ஆராய்ச்சிப் பணியாகும் என்று பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹாரி பஸ்டைட்ஸ் குறிப்பிட்டார். இங்கு பணிபுரியும் மதம் தொடர்பான கல்வி சம்பந்தப்பட்ட துறைப் பேராசிரியர் ஹால் பிரெஞ்சு, இந்தக் கலைக்களஞ்சியம் ஆவணப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டிலிருந்து இதற்காகப் பணியாற்றி வருகின்றார்.
இது தனக்கு ஒரு அருமையான சலுகை என்று அவர் தனது உரையில் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக கரோலினா பல்கலைக்கழகம், இந்தியாவிற்கான ஒரு வருடக் கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது.
தன்னுடைய சர்வதேச நிகழ்வுகளை விரிவுபடுத்தும்விதமாக ஆண்டிற்கு ஒரு நாடு என்ற அளவில் இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருப்பதையும், பொருளாதார வல்லரசாக மாற்றம் காண்பதையும் மற்றும் வளர்ந்துவரும் அதன் உறவுகளையும் குறிப்பிட்டு இந்தியா முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தலைவர் ஹாரி அறிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !