Headlines News :
Home » » சந்துருவின் உண்மைத் தகவல்கள்!

சந்துருவின் உண்மைத் தகவல்கள்!

Written By TamilDiscovery on Wednesday, August 7, 2013 | 10:38 AM

இயக்குநர் சேரன் மகளின் காதல் விவகாரம்தான் ஊடகங்களில் இன்றைய ஹாட் டாபிக். காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தனது தந்தை மீதே புகார் கொடுத்தார் சேரனின் இளையமகள் தாமினி.

ஆனால் அதனை மறுத்த சேரனோ, தான் காதலுக்கு எதிரியல்ல. என் மகளுக்கு ஒரு நல்லவன் கணவராக வரவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன் என்று கண்ணீர் மல்க பேட்டியளித்தார். சந்துருவைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் குறித்து பல்வேறு மட்டங்களில் உலா வரும் சில தகவல்கள்.

ஏழு ஆண்டுகளாக:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அன்பு நகரில் ஏழு ஆண்டுகளாக சந்துருவும் அவரது சகோதரரி கவுரியும் தங்கி இருந்தார்களாம். அப்போது மண்டபம் அதிமுக ஒன்றிய செயலாளர் சீனிகட்டி என்பவரின் மருமகன் முகமது இலியாசை கவுரி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கணவர் மீது புகார்:

மானாமதுரையில் உள்ள பென்னி பில்லிங் ஸ்டேசனை முகமது இலியாஸ் நிர்வகித்து வந்தார். அதனை கவுரியும் அவரது சகோதரர் சந்துருவும் நிர்வகித்து வந்தனராம். முகமது இலியாசிடம் சொத்தை பிரித்து தரச் சொல்லி கவுரியும் சந்துருவும் கேட்டனர் அவர் மறுக்கவே காவல்நிலையத்தில் தன்னுடைய நகை, பணத்தை முகமது இலியாஸ் திருடியதாக கவுரி புகார் செய்தார். பின் புகாரை வாபஸ் பெற்றாராம்.

இரண்டாவது மனைவி:

முகமது இலியாசுக்கு ஏற்கனவே அவரது சமூகத்தை சார்ந்த பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் இருப்பதால் இரண்டாவதாக மணமுடித்த கவுரிக்கு பிரச்சனை எழுந்தது. இந்த 2வது திருமணம் குறித்து இலியாசின் முதல் மனைவி உச்சப்புளி ஐமாத்தில் புகார் செய்தாராம்.

சொத்தில் பங்கு:

இந்நிலையில் முகமது இலியாஸ் மலேசியாவில் மர்மமான முறையில் இறந்து போனார். அதன்பின் கவுரி உச்சிப்புளி ஐமாத்தில் இலியாசின் சொத்தில் பங்கு தருமாறு புகார் கொடுத்தார். ஆனால் ஐமாத்தார்கள் கவுரியைப்பற்றி விசாரித்து விட்டு சொத்துக்களை தர மறுத்துவிட்டனராம்.

நடன குரூப்பில்:

இந்தநிலையில்தான் மதுரையில் உள்ள ஆடல் பாடல் குரூப்பில் ஆடி கொண்டிருந்த சந்துருவிற்கு கலைஞர் டிவி நடத்திய மானாட மயிலாட நிகழ்ச்சியில், பரிசு கிடைத்தது.

சென்னையில் சந்துரு:

அந்த காலகட்டத்தில் மானாமதுரையில் பணக்கார முஸ்லீம் பெண் ஒருவரை காதலிப்பதாக சொல்லி அவர் வீட்டிற்கே சென்று பெண் கேட்டனராம் கவுரியும் சந்துருவும். ஆனால், மானாமதுரை கன்னார் தெரு ஐமாத்தார்கள் கவுரியையும் சந்துருவையும் பலமாக எச்சரிக்கவே இருவரும் சென்னைக்கு குடி பெயர்ந்தனராம்.

மன்னிப்பு கடதம்:

சந்துருவைப் பற்றியும் கவுரியை பற்றியும் மானாமதுரை மற்றும் உச்சிப்புளியில் விசாரித்தால் உண்மை அனைத்தும் தெரியும் என்கிறார்கள். மேலும், மானாமதுரை கன்னார்தெரு ஐமாத்தில் கொடுக்கப்பட்ட மன்னிப்பு கடிதம் இன்றைக்கும் உள்ளதாக கூறப்படுகிறது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template