ரஜினிகாந்த், கமல் ஹாஸனுடன் நடிக்க வேண்டும் என்று ப்ரியாமணி தனது ஆசையை தெரிவித்துள்ளார். ப்ரியாமணி பருத்திவீரன் படத்தில் கார்த்தியுடன் நடித்தார். அதில் அவர் முத்தழகாக அருமையாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
அவர் என்ன தான் தேசிய விருது பெற்றாலும் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. இதனால் கன்னடம், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் 1 கன்னடப் படம், 2 தெலுங்கு மற்றும் 1 மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
ஷாருக்கை பார்த்து வளர்ந்தவள்:
தான் ஷாருக்கான் படங்களை பார்த்து வளர்தவள் என்று ப்ரியாமணி தெரிவித்துள்ளார். அதனால் தான் அவரது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட அழைத்ததும் உடனே ஒத்துக் கொண்டாராம்.
ரஜினி, கமல் கூட:
ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனுடன் நடிக்க வேண்டும் என்று ப்ரியாமணி ஆசைப்படுகிறார்.
மறுபடியும் கார்த்தியுடன்:
தன்னுடைய பருத்திவீரன் நாயகன் கார்த்தியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.
தேசிய விருது ப்ரியாமணியின் நிறைவேறாத ஆசை!
Written By TamilDiscovery on Tuesday, July 16, 2013 | 11:26 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !