இந்தியாவில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்த 20 வாலிபர்கள் 4 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பகடியா என்ற மலைவாழ் இனத்தினர் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.
அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு உதவியுடன் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று பகுர் மாவட்டத்தில் உள்ள லிடிபாரா கிராமத்தில் பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது. மலைவாழ் இன மாணவிகள் தங்கி படிப்பதற்கு வசதியாக பாடசாலைக்கு அருகிலேயே விடுதி ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் இன மாணவிகள் தங்கியுள்ளனர். நேற்றிரவு அந்த விடுதிக்குள் சுமார் 20 வாலிபர்கள் திடீரென நுழைந்தனர். விடுதி வார்டனையும், ஆசிரியர்களையும் தாக்கினார்கள். பிறகு அவர்களை ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.
அதன் பிறகு 14 வயதுடைய 4 மாணவிகளை அந்த கும்பல் கடத்திச் சென்றது. அருகில் உள்ள காட்டுக்குள் சென்றதும் 20 வாலிபர்களும் அந்த மாணவிகளை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே 4 மாணவிகள் கடத்தப்பட்ட தகவல் பரவியதும் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அருகில் உள்ள காடுகளுக்குள் புகுந்து தேடினார்கள். கிராம மக்கள் திரண்டு வந்ததும் 20 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து 4 மாணவிகளையும் கிராம மக்கள் மீட்டு, மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்தனர். அப்போது ஒரு மாணவி கூறுகையில், ‘‘எங்களை கடத்தியவர்கள் மது அருந்தி இருந்தனர். எங்களை பலாத்காரம் செய்த பிறகு கொல்ல முயன்றனர். நல்ல வேளையாக கிராமத்தினர் வந்ததால் தப்பித்தோம்’’ என்றார். இதுபற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் வந்து 4 மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சோதனையில் 4 மாணவிகளும் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டமை உறுதியானது. பொலிசார் வழக்குப்பதிவு செய்து 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார்கள். அதன் மூலம் அருகில் உள்ள கிராமத்து வாலிபர்கள் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சில வாலிபர்களை பொலிசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
குற்றவாளிகள் 24 மணி நேரத்துக்குள் சரண் அடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மலைவாழ் மாணவிகள் நால்வர் கடத்தி வல்லுறவு: 20 வாலிபர்களுக்கு சரணடைய கெடு!
Written By TamilDiscovery on Tuesday, July 16, 2013 | 12:35 AM
Related articles
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !