ரமணா இந்தி ரீமேக்கில் தமன்னாவின் வாய்ப்பை ஸ்ருதி ஹாஸன் தட்டிப்பறித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் கேப்டன் விஜயகாந்த்தை வைத்து எடுத்த சூப்பர் ஹிட் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இந்தியில் வானம் பட இயக்குனர் க்ரிஷ் இயக்குகிறார். படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே தமிழ் படமான சிறுத்தை ரீமேக்கில் நடித்த அக்ஷய் குமார் தான் ஹீரோ.
தமன்னா:
விஜயகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக தமன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.
தமன்னா இல்லை ஸ்ருதி:
அக்ஷய் குமாருக்கு ஜோடி தமன்னா இல்லை ஸ்ருதி ஹாஸன் என்று தற்போது பேச்சாகக் கிடக்கிறது.
வாய்ப்பை தட்டிப்பறித்த ஸ்ருதி?
பாலிவுட்டில் பெரிய நடிகையாக விரும்பும் ஸ்ருதி தமன்னாவின் வாய்ப்பை ஏதோ செய்து தட்டிப்பறித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அக்கி மூலம் உச்சம்:
முன்னணி ஹீரோவாக இருக்கும் அக்ஷய் குமாருடன் நடித்தால் பாலிவுட்டில் நமக்கு நல்ல இடம் கிடைக்கும் என்று ஸ்ருதி நினைக்கிறாராம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !