வடக்கு ஸ்பெயின் நகரான சான்டியாக டி காம்போஸ்டெலா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. ஸ்பெயின் நாட்டில் நடந்த மிகப் பெரிய விபத்துக்கள் வரிசையில்இது சேர்ந்துள்ளது. தடம் புரண்ட பெட்டிகள் பலவற்றில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதுவே உயிரிழப்பு அதிகமாக காரணம். இந்த நகரில் நடந்த கிறிஸ்தவ திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ரயில்களில் வந்தவண்ணம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் கவிழ்ந்து விழுந்த வேகத்தில் பலர் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் பெட்டிகளுக்குக் கீழே போய் மாட்டிக் கொண்டனர். ரயில் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக விபத்தில் சிக்கி மீண்ட ஒருவர் கூறினார்.
இந்த நகரம்தான் ஸ்பெயின் பிரதமர் மரியானோ ராஜோய் பிறந்த ஊராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு:-
வட – மேற்கு ஸ்பெய்னில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 77 பேர் மரணமடைந்துள்ளதுடன், 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.இந்த ரயிலின் 8 பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.
இந்த ரயில் மட்ரிட் பகுதியிலிருந்து பிர்ரோல் பகுதிவரை பயணித்துக்கொண்டிருந்தபோதே நேற்று புதன்கிழமை விபத்திற்குள்ளானதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து இதுவரையில் 73 சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். மேலும், ரயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர் என அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்பெய்னில் 4 தசாப்தங்களின் பின்னர் இவ்வாறான பாரிய ரயில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !