தலையில் பலமான இரும்புப் பொருள் தாக்கியதாலும் கூட தர்மபுரி இளவரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மறு பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை இளவரசன் என்ற தலித் வாலிபர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நாயக்கன்கொட்டாய், நத்தம் காலணி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தலித் மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.
பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் சேர்ந்து வாழ்ந்த இந்த இளம் தம்பதி சில காரணங்களுக்காகப் பிரிந்தனர். மனைவி பிரிந்து சென்ற சில நாட்களில் இளவரசன் தர்மபுரியில் ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், இளவரசன் தலையில் அடிப்பட்டதால் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று இளவரசனின் நண்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து டெல்லி எய்ஸ்ம் வைத்தியசாலை வைத்தியர்கள் 3 பேர், இளவரசனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எய்ம்ஸ் வைத்தியர்கள் மறுபிரேத பரிசோதனை செய்தபின்னர், இளவரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை வைத்தியர்களின் மறுபிரேத பரிசோதனை அறிக்கை இளவரசனின் தந்தையிடம் வழங்கப்பட்டது.
தர்மபுரி நீதிமன்றம் வழங்கிய அந்த அறிக்கையில்:
“இளவரசனின் தலையில் மிகப்பெரிய காயம் ஏறப்டடதால் மரணம் ஏற்பட்டிருக்கிறது. ரயில் மோதியதால் இந்த காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
கனமான இரும்பு பொருளால் தாக்கப்பட்டிருந்தாலும் இறந்திருக்கலாம். அதேசமயம் உடலில் வேறு எந்த காயமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !