இலங்கையில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான உரிமை அமைப்பு இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பெண்கள் உரிமை அமைப்பின், இணை தலைவர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
ஆசிரியை ஒருவர் அரசியல்வாதி ஒருவரால் முழங்காலில் நிற்கவைக்கப்பட்ட சம்பவம் இதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. இந்தநிலையில் 2011 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 60 வீத குடும்ப வன்முறைகளுடன் ஒப்பிடுகையில், 2013 ல் அது 80 வீதமாக உயர்வடைந்துள்ளது என்று போல்ராஜ் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் தூசிக்கப்படுகின்ற சம்பவங்கள் 95 வீதமாக அதிகரித்துள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !