கைது செய்ய போவதாக பகிரங்கப்படுத்தாது, இரகசியமாக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிக் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தனவின் மூன்று வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டு, இரகசிய பொலிஸார், அவரை இரகசியமாகவே வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி கடுவலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதாக ஆரம்பத்தில், தகவலை பகிரங்கப்படுத்தியிருந்த,பொலிஸார் பின்னர், அவ்வாறு யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். சில ஊடகங்கள், வாஸ் குணவர்தனவின் மகன் கைது செய்யப்பட்டார் என்று செய்திகளை வெளியிட்ட பின்னர், பொலிஸ் பேச்சாளர் அதனை அதிகாரபூர்வமாக ஏற்று கொள்ளவில்லை. இதனால், அந்த ஊடகங்கள் செய்திகளை திரும்பபெற்றன.
வாஸ் குணவர்தனவின் மகன், பாதுக்க பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. அதிகாரபூர்வமாக கைதுசெய்து தடுத்து வைத்திருந்த விடயம் தொடர்பில், பதிவுகளை செய்யாத இரகசிய பொலிஸார், மூன்று வாக்குமூலங்களை பெற்ற பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
அவர் தற்பொது தெஹிவளை நெதிமால பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் இருப்பதாக தெரியவருகிறது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, பம்பலப்பிட்டியை சேர்ந்த செல்வந்த வர்த்தகரான ஷியாம் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார்.
பல சட்டவிரோத கொலைகளுடன் இவருக்கும், இவரால் வழி நடத்தப்பட்ட பொலிஸ் குழுவுக்கு தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !