அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை முன்னாள் சாம்பியன் இமைல் கிரிப்பித் தனது 75வது வயதில் உயிரிழந்துள்ளார்.
1960ம் ஆண்டுகளில் குத்துச்சண்டை போட்டிகளில் பெரும் புகழ்பெற்றவராக விளங்கியவர் இமைல் கிரிப்பித் (75).
1962ம் ஆண்டில் அவர் உலக சாம்பியன் பட்டமும் பெற்றார். இந்த போட்டியில் இவருடன் மோதிய, பென்னி பாரெட், கடும் காயம் காரணமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஞாபக மறதி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த கிரிப்பித், கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். முக்கிய வீரர்கள் பற்றிய விவரங்களை பராமரிக்கும் ஹால் ஆப் பேர்ம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் எட்வர்ட் புரோபி கூறுகையில்,
"கிரிப்பித் கடவுள் தந்த வரப்பிரசாதம். அவர் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக திகழ்ந்தார். போட்டி மேடைக்கு வெளியே கிரிப்பித் சிறந்த மனிதராகவும் இருந்தார்" என்று கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !