ஐக்கிய அரபு இராச்சிய இணையத்தளங்களை ஹெக்கிங் செய்ய எகிப்திய ஹெக்கர்கள் முயன்றுள்ளனர்.
இத்தகவலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அறிவித்துள்ளது.
தமது அரசாங்க இணையத்தளங்களை முக்கிய இலக்காகக் கொண்டே இத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஐ.அ.இ. அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.எனினும் இம்முயற்சியை தாம் முறியடித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியாக மொஹமட் முர்ஷி பதவியேற்றதையடுத்து அந்நாட்டுடனான ஐக்கிய அரபு இராச்சியத்தின் உறவு மோசமடைந்தது.
இந்நிலையில் தற்போது முர்ஷி பதவிவிலக்கப்பட்டுள்ளார்.
மேலும் முர்ஷியின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்வதாக அந்நாடுகுற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாமே மேற்படி தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !