இந்தியாவின் உத்தரகாண்ட் மழை வெள்ளத்தில் காணாமல் போன 5,748 பேரை இறந்தவர்களாக அறிவிக்க மறுத்த முதல்வர் பகுகுணா, அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கும் என கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர்.
5,748 பேரை காணவில்லை. இவர்களை கண்டுபிடிக்க நேற்று வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்க முடியாதவர்கள், 16ம் திகதிக்குப் பின் இறந்தவர்களாக கருதப்பட்டு, அவர்களின் உறவினர்களுக்கு நிவாரண தொகை அளிக்கப்படும் என முதல்வர் பகுகுணா கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் இணைந்து முதல்வர் பகுகுணா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது,
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கும். அவர்கள் வீடு திரும்புவார்கள் என நம்புகிறோம்.
அவர்களை இறந்தவர்களாக அறிவிக்க முடியாது. காணாமல் போனவர்களின் உறவினருக்கு மத்திய, மாநில அரசு இணைந்து தலா ரூ.5 இலட்சம் நிவாரணம் அளிக்கும். காணாமல் போனவர்கள் திரும்பி வந்தால், நிவாரணத் தொகையை திரும்பி அளிக்க வேண்டும்.மோசமான வானிலையால் கேதார்நாத் கோயிலில் இடிபாடுகளை அகற்றி சுத்தப்படுத்ததும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மற்றும் கழுதைகள் மூலம் நிவாரணபொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் பி.எஸ்.என்.எல் தகவல் தொடர்பு வசதிகள் சரி செய்யப்பட்டுள்ளன என்றார் பகுகுணா.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !