பாணந்துறையில், பாடசாலை ஒன்றுக்கு அருகில் கார் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சரணடைந்த 39 வயதான பெண்ணொருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டள்ளது.
அவரது கள்ள மனைவியென்று சந்தேகிக்கப்படும் பண்டாரகம அலுபோமுல்லையை வசிப்பிடமாக கொண்ட ஒரு குழந்தையின் தாயான 39 வயதான சஞ்ஜீவனி தேவிகா என்பவரையே எதிர்வரும் 24 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். பாணந்துறையில், பாடசாலை ஒன்றுக்கு அருகில் கார் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது தொடர்பில் பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழந்து வந்த 39 வயதான பிரதீப் தேவநாராயன என்பவரின் மனைவி இலங்கைக்கு திரும்பியிருந்த நிலையில் கடந்த 01 ஆம் திகதி பாணந்துறையில் காரொன்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண் மற்றும் அந்த பெண்ணின் தாய் உட்பட ஆறுபேரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தியதுடன் வாக்குமூலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையிலேயே பண்டாரகம அலுபோமுல்லையை வசிப்பிடமாக கொண்ட ஒரு குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். அவருக்கான விளக்கமறியலே நேற்று நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது மார்பு கச்சையினால் வர்த்தகரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !