அமெரிக்க உளவு நிறுவனத்தின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய உளவு நிறுவன முன்னாள் அதிகாரி ஸ்நோடென்னை மாஸ்கோவில் முடக்கியது அமெரிக்காதான்' என ரஷ்ய அதிபர் புடின் குற்றம் சாட்டினார். அமெரிக்க உளவு நிறுவனமான என்எஸ்ஏ, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளின் இணையதளங்களுக்குள் ஊடுருவி லட்சக்கணக்கானோரின் தகவல்களை திரட்டியதாக அதன் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் அம்பலப்படுத்தினார். அதன்பின் அமெரிக்காவில் இருந்து தப்பி மாஸ்கோவில் தஞ்சம் அடைந்தார். ஸ்நோடென்னை கைது செய்ய அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
'அவரை மாஸ்கோவில் இருந்து வெளியேற்றி அமெரிக்காவுக்கு கொண்டு வந்து வழக்கை சந்திக்க ரஷ்யா உதவ வேண்டும்' என்று ரஷ்ய அதிபர் புடினை போனில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட புடினிடம், ஸ்நோடென் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த புடின், ‘எனக்கு எப்படி தெரியும்? அவரது வாழ்க்கை, அவரது முடிவு’ என்றார். மேலும் அவர், ‘ஸ்நோடென்னை நாங்கள் விரும்பி அழைக்கவில்லை. அவரது பயணத்தின் நோக்கமும் ரஷ்யா கிடையாது. செல்லும் வழியில் முடக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடனான ரஷ்யாவின் உறவுகள் பாதிக்காத விதத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடாத வரை அவர் இங்கேயே இருக்க முடியும். அவர் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதுகுறித்து இன்னும் பரிசீலித்து முடிவு எதுவும் செய்யப்படவில்லை. அவர் தென் அமெரிக்க நாடுகளுக்கு தஞ்சம் கேட்டு செல்ல முடியாமல் மாஸ்கோவிலேயே முடக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்காதான் காரணம்’ என்று தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !