சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதமளிப்பதினை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளார்.
இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
உள்நாட்டுப் போரில் ஆசாத் ஆதரவுப் படையினர் இரசாயன குண்டுகளை பாவிக்கின்றமை தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையை அடுத்தே ஒபாமா இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இராசயன குண்டுகள் பாவிக்கப்பட்டால் அமெரிக்கா நிச்சயமாக உள்நாட்டுப் போரில் தலையிடும் என ஒபாமா கடந்த சில காலங்களாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதமளிக்கவுள்ளமை உறுதியாகின்றதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் எவ்வைகையான ஆயுதங்களை அமெரிக்க வழங்குமென்பது தொடர்பில் பரீசீலிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க இராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பானது ஆயுதங்களை எவ்வாறு உபயோகிப்பது தொடர்பில் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் இம்முடிவு சிரிய உள்நாட்டுப் போர் நிலைமைகளை மேலும் சீர்கெடச் செய்யுமென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆசாத்திற்கு ஆதரவாக ரஸ்ய செயற்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்யும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !