இலங்கையிலிருந்து 290 கடல் மைல் தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருப்பதாக மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து 70 பேருடன் கடந்த 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச்சென்ற சட்டவிரோத படகொன்றே இவ்வாறு தத்தளித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
'சமின் புத்தா' என்ற படகே இவ்வாறு தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த படகில் வடக்கு கிழக்கைச்சேர்ந்தவர்களே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இயந்திர கோளாறு காரணமாகவே படகு தத்தளித்துக்கொண்டிருப்பதாக ரேடார் தொடர்புபாடல் மூலமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !