Headlines News :
Home » » விஜய், அஜீத் அவர்களுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா? விஷால் டென்சன்!

விஜய், அஜீத் அவர்களுக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா? விஷால் டென்சன்!

Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 2:47 PM

விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தலைவா, இந்த படத்தை அதன் ஆடியோ விழாவின்போதே தாங்கள் வெளியிடப்போவதாக அறிவித்தது வேந்தர் பிலிம்ஸ்.

அதோடு, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்தையும் வேந்தர் பிலிம்ஸ்தான் வெளியிடுகிறார்கள். ஆனால், இந்த இரண்டு படங்களையுமே அவர்கள் படம் பார்க்காமலேயே விலை பேசி விட்டனர்.

இந்தநிலையில், விஷால் நடித்துள்ள பட்டத்து யானை படத்தை வெளியிடவும் வேந்தர் பிலிம்சிடம் பேசிவந்தார்கள். ஆனால், படத்தை பார்த்தபிறகுதான் அதுபற்றி முடிவு செய்ய முடியும் என்று அவர்கள் சொன்னார்களாம்.

இதனால், விஷால் டென்சன் அடைந்து விட்டாராம், விஜய், அஜீத் என இரண்டு நடிகர்களின் படங்களையும் பார்க்காமலேயே வாங்கி விட்டீர்கள், அதேபோல் என் படத்தையும் வாங்கினால் என்ன என்றாராம். அதற்கு, அவர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் எப்படியும் வாங்கிய பணத்தை எடுத்து விடலாம் உங்களுக்கு அப்படி கேரண்டி இல்லையே? என்றார்களாம்.

இப்படி நடந்த பேச்சுவார்த்தையால் விஷால் படத்தை வாங்கும் முயற்சியை கைவிட்டு விட்டதாம் வேந்தர் பிலிம்ஸ்.

இதனால் வேறு நபர்களிடம் பேசி வருகிறது விஷால் வட்டாரம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template