நம் சாதா கண்களுக்கு சற்றும் புலப்படாத, நம் ஆறறிவுக்கு சற்றும் அகப்படாத ஒரு புதிய கிரகத்தை அதன் ஒரிஜினல் நிறத்துடன் அப்படியே துல்லியமாக தனது கேமராக் கண்களில் அள்ளிக் கொண்டு வந்துள்ளது ஹப்பிள் தொலைநோக்கி. தனது ஆயுட்காலத்தையும் தாண்டி மாடாய்த் தேய்ந்து கொண்டிருக்கும் தொலைநோக்கிதான் இந்த ஹப்பிள்.
ஆனால் இப்போது அது பிடித்துக் கொண்டு வந்திருக்கும் விஷயம் விஞ்ஞானிகளின் ஆய்வுக் கண்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்துள்ளது. நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தை அதன் அசல் நிறத்துடன் அடையாளம் கண்டு நமக்குச் சொல்லியுள்ளது இந்த ஹப்பிள்.
சபாஷ் ஹப்பிள்:
நமது சூரியக் குடும்பத்திலிருந்து மிக மிக மிக தொலைவில் உள்ளது இந்த கிரகம். இது ஆழ்ந்த நீல நிறத்தில் அட்டகாசமாக காணப்படுகிறது. இதுவரை ஒரு தொலைதூர உலகின் அசல் நிறத்தை நமது விஞ்ஞானிகள் துல்லியமாக பார்த்ததில்லை.ஆனால் ஹப்பிள் முதல்முறையாக ஒரு வேற்று கிரகத்தின் அசல் நிறத்தை நமக்கு அடையாளம் காட்டியிருப்பது பெரும் வியப்புக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
வேற்று கிரகத்தின் அசல் நிறம்:
ஒரு வேற்று கிரகம் என்ன நிறத்தில் இருக்கும் என்பதை இப்போதுதான் ஹப்பிள் மூலம் நாம் காண நேர்ந்துள்ளது.
ஆழ்ந்த நீல நிறம்:
இதுவரை நமக்குத் தெரிந்த வேற்று விண்வெளி பொருட்கள் எல்லாம் சாதாரண பழுப்பு நீல நிறத்தில்தான் நமக்குத் தெரிந்திருக்கின்றன. ஆனால் முதல் முறையாக ஆழ்ந்த நீல நிறத்திலான கிரகத்தை நாம் பார்க்க முடிந்திருக்கிறது.
வாயு கிரகம்:
பூமியிலிருந்து 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த புதிய கிரகம் இருக்கிறது. இந்த கிரகம் முற்றிலும் வாயுக்களால் நிரம்பியுள்ளது. இந்த வாயு உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகும்.
பேய் வேகப் புயல்கள்:
இந்த கிரகத்தின் பெயர் HD189733b, இங்கு வெப்ப நிலை 1000 டிகிரி செல்சிஷயாக உள்ளது. மிகப் பயங்கரமான புயல்கள் இங்கு வீசிக் கொண்டுள்ளன. வேகம் என்றால் அப்படி ஒரு பேய் வேகத்திலான புயல்கள் இவை.
பூமி கூட புளூ தான்:
விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் இதே போலத்தான் ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கும். அதேபோலத்தான் இந்த கிரகமும் தென்படுவதால் நமது விஞ்ஞானிகளுக்கு சின்னதாக ஒரு நப்பாசை பிறந்துள்ளது. அதாவது பூமியைப் போல இங்கும் வாழ்வதற்கு வழி உள்ளதா என்ற ஆர்வம்தான் அது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !