ஜேர்மன் நாட்டில் பெண் ஒருவர் தனது நண்பனின் தந்தையை மிக கொடூரமான முறையில் கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்யூலா (Manuela M) (வயது 41). இவருடைய நண்பர் ரால் நீப் (Ralf Kniep) (41). மான்யூலா தனது நண்பருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். நண்பர் ரால் நீப்பின் தந்தை கார்ல் ஹெயின்(Karl Heinz) (85).
இவர் அதே வீட்டில் தனது மகனுடன் வசித்த வந்தார். மற்றும் தாயார் ஜெர்டா(Gerda) வயது(77) என்பவர் கருத்து வேறுபாட்டின் காரணமாக தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மான்யூலாவுக்கும் கார்ல் ஹெயினுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மான்யூலா தனது கட்டுப்பாட்டை இழந்து மிகவும் கோபமடைந்துள்ளார். இதனால் தனது கையில் கிடைத்த பாத்திரத்தை எடுத்து கார்ல் மேல் அடித்தது மட்டுமல்லாமல் அவரின் கழுத்த பிடித்த நெறித்து கொலை செய்துள்ளார். பின்பு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்திற்கு பின்பு இவரது குடும்பத்தினர் இவரை காணவில்லை என்று பொலிசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து கார்ல்லின் கையானது தனியாக கிடந்ததை வைத்து அவரது உடலை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதற்கு காரணமான மான்யூலாவை கைது செய்வதற்கு முன்பு அவரை பற்றி நண்பர்களிடம் விசாரணை நடத்திய பின்பு பொலிசார் கைது செய்துள்ளனர். எதற்காக மான்யூலா அவரை கொலை செய்தார் என்று விசாரணை செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையானது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இதன் அடுத்த கட்ட விசாரணை ஒகஸ்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !