உலக நாடுகள் அதிகரித்து வரும் சக்தி தேவையை ஈடுசெய்யும் பொருட்டு அணுச் சக்தியை பெரிதும் நம்பத் தொடங்கியுள்ளன.
அணுச் சக்தி நிலையங்களால் கூடிய பின்விளைவுகள் பற்றி அறிந்திருந்தாலும் தேவைக்கு முன்னாள் அவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இதனாலேயே அணு உலைகளும், அணு சக்தி நிலையங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன. மேலதிகமாகவும் நிர்மாணிக்கப்படுகின்றன. பல நாடுகள் இதனைக் கைவிட்டுள்ள போதிலும் சில நாடுகள் இன்றளவும் அணு சக்தியில் தங்கியுள்ளது. நமது அண்டை நாடான இந்தியாவை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்நிலையில் ரஸ்யா மிதக்கும் அணு சக்தி நிலையமொன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கென தயாரிக்கப்பட்டு வரும் பிரமாண்ட கப்பலொன்றிலேயே மேற்படி அணு சக்தி நிலையம் உருவாக்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு குறித்த கப்பல் தனது பணியைத் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ரஸ்யாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான 'பால்டிக் பிளான்டினால்' நிர்மாணிக்கப்படும் அணு சக்தி நிலையத்துடனான முதல் கப்பல் அகாடிமிக் லொமோனோசோவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் பின் தங்கிய பகுதிகளுக்கு சக்தி, குடி நீர் போன்ற வசதிகளை வழங்கும் பொருட்டே இதனை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கப்பலின் நிறை 21,500 தொன்கள் எனவும் 69 பணியாளர்கள் அதில் சேவையில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கப்பலானது பெரிய தொழில்துறை நிறுவனங்களுக்கும், கடற்கரையிலிருந்து சிறு தொலைவில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கும் சக்தி வழங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கப்பலில் அமைக்கப்படவுள்ள அணுமின் நிலையமானது 2 KLT-40 ரியாக்டர்களை கொண்டிருக்கும். இவ்விரு ரியாக்டர்களும் 70MW மின்சாரத்தை உற்பத்திசெய்யக்கூடியன.
இதன் மூலம் 200,000 பேரைக் கொண்ட ஒரு நகருக்கு சக்தி வழங்க முடியுமென கணிக்கப்பட்டுள்ளது. இச் சக்தி நிலையத்தின் மூலமாக உவர் நீரை சாதாரண பாவனைகான நீராக மாற்றும் வசதியும் உள்ளது. 240,000 கன மீற்றர் நீரை புதிய நீராக மாற்றமுடியுமென்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !