நாய்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலிக்குள் போதைப் பொருட்களை கடத்தி வந்த நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல்காரர்கள் அனைவரும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் 'கொக்கேய்ன்' போதைப் பொருளை இத்தாலிக்குள் கடத்தி வந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாய்களுக்கு கொகேய்ன் அடங்கிய சிறிய பைகளை விழுங்கச் செய்தே இத்தாலிக்குள் இவற்றைக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் நாட்டுக்குள் வந்ததும் நாய்களைக் கொன்று அவற்றின் வயிற்றிலுள்ள போதைப் பொருளை வெளியே எடுப்பதும் தெரியவந்துள்ளது.
ஈக்குவடோர், பேர், செல்வடோர் நாடுகளைச் சேர்ந்த 19-37 வயது வரையான இளைஞர்களே இக்குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதமே இக்கடத்தல் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்போது 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !